புதிய வீரரை அறிவித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

Published On:

| By Jegadeesh

கடந்த ஐபிஎல் தொடரில் ஏழாம் இடத்தை பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இந்த ஆண்டு எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியுள்ளது.

ஆனால் அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தால் வெளியேறியது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இதனிடையே, நித்திஷ் ராணா புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

அவரது தலைமையில் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற கொல்கத்தா நாளை (ஏப்ரல் 6) நடைபெறும் பெங்களூருவுக்கு எதிரான தன்னுடைய 2-வது போட்டியில் களம் காணுகிறது.

முன்னதாக ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தால் விலகிய நிலையில் அவருக்கான மாற்று வீரரை கொல்கத்தா அணி நிர்வாகம் அறிவிக்காமல் இருந்து வந்தது.

அந்த நிலைமையில் வங்கதேசம் ஆல் ரவுண்டர் சாகிப் அல் ஹசனும் இந்த ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது கொல்கத்தா அணிக்கு மேலும் பின்னடைவை கொடுத்தது.

இந்நிலையில் , ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் வாங்கப்பட்டுள்ளதாக கொல்கத்தா அணி நிர்வாகம் இன்று (ஏப்ரல் 5) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இங்கிலாந்தின் அதிரடி தொடக்க வீரரான அவர் ஐபிஎல் தொடரில் 2017, 2018 ஆகிய சீசன்களில் டெல்லி அணிக்காக விளையாடியிருந்தார். கடைசியாக 2021 சீசனில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

சிபிஐ, அமலாக்கத் துறை.: 14 எதிர்க்கட்சிகளின் மனு தள்ளுபடி!

நெல்லைக்கு புதிய எஸ்.பி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share