IPL2024: கடைசி வரை நீடித்த போராட்டம்… தாய் கழகத்தில் இணைந்தார் ஹர்திக்

Published On:

| By Manjula

ipl2024 hardik pandya Mumbai Indians

கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை கிளப்பிய ஹர்திக் பாண்டியா விவகாரம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

வருகின்ற டிசம்பர் 19-ம் தேதி துபாயில் மினி ஏலம் நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்பாக ஐபிஎல் அணிகள் தங்கள் அணி வீரர்களில் தேவைப்படுவோரை தக்க வைத்தும், பிற அணிகளில் உள்ள வீரர்களை வாங்கவும் ஆர்வம் காட்டி வருகின்றன.

அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை வாங்க பகீரத பிரயத்தனம் செய்தது. கிட்டத்தட்ட அவரை வாங்கி விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், குஜராத் அணி அவரை தக்க வைத்ததாக அறிவிப்பு வெளியிட்டது.

இதனால் வருகின்ற 2024 ஐபிஎல் தொடரில் ஹர்திக் எந்த அணிக்கு விளையாடுவார்? என்ற கேள்விக்கு விடை தெரியாத நிலையே நீடித்தது. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி வாங்கி விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாம் முன்னரே சொன்னது போல மும்பை அணி கேமரூன் கிரீனை பெங்களூர் அணிக்கு விற்பனை செய்து, ஹர்திக் பாண்டியாவை மீண்டும் அணிக்கு எடுத்துள்ளது. அதேபோல சுப்மன் கில் குஜராத் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். கேப்டனாக ரோஹித் இடத்தை ஹர்திக் நிரப்புவார் என்பதாலேயே மும்பை அணி பெரும்பாடு பட்டு குஜராத்திடம் இருந்து வாங்கியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

மிரள வைக்கும் ‘காந்தாரா சாப்டர் 1’ போஸ்டர்!

டிஸ்பிளே இல்லாத உலகின் முதல் AI Pin ஸ்மார்ட்போன்… சிறப்பம்சங்கள் என்னென்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel