ஐபிஎல் ஏலம் வருகின்ற டிசம்பர் 19-ம் தேதி துபாயில் நடைபெறுகிறது. அதற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்க, விற்க செய்யலாம். இதற்கான காலக்கெடு நாளையுடன் (நவம்பர் 26) முடிவடைகிறது.
மற்ற ஐபிஎல் அணிகள் எல்லாம் பறந்து, பறந்து வீரர்களை வாங்கி, விற்றுக்கொண்டு இருக்க சென்னை அணி கிணற்றில் போட்ட கல் போல சத்தமில்லாமல் இருக்கிறது. இதற்கிடையில் 16.25 கோடி கொடுத்து எடுக்கப்பட்ட இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பணிச்சுமை காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். அதேபோல சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்த, அம்பதி ராயுடுவும் இந்த ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார். ஆனால் இதுகுறித்து எல்லாம் சென்னை அணி பெரிதாக அலட்டி கொண்டது போல தெரியவில்லை.
இந்த நிலையில் சென்னை அணி வருகின்ற ஐபிஎல் ஏலத்தில் குறி வைக்கப்போகும் வீரர்கள் குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
அதன்படி தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஜெரால்ட் காட்ஸி (23), ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் (30), ஆப்கானிஸ்தானை சேர்ந்த அஸ்மதுல்லா ஓமர்சாய் (23),நியூசிலாந்தை சேர்ந்த ரச்சின் ரவீந்திரா (24), மற்றொரு நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் (32), இலங்கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சதீரா சமரவிக்ரமா (28) ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் (29), மிட்செல் ஸ்டார்க் (33) ஆகிய 8 வீரர்களை தான் சென்னை அணி தட்டி தூக்க இருக்கிறதாம்.
தற்போது சென்னை அணி கைவசம் 1.50 கோடிகள் மட்டுமே இருக்கிறது. இதில் பென் ஸ்டோக்ஸ் விலகி விட்டதால் மேலும் ஒரு 16.25 கோடி கிடைக்கும். அதேபோல ராயுடுவும் விலகுவதால் மேலும் 6.75 கோடிகள் வரும். மொத்தத்தில் ஐபிஎல் ஏலத்திற்கு முன் 24.50 கோடிகள் கைகளில் இருக்கும். இதை வைத்து மட்டுமே வைத்து சென்னை அணி வீரர்களை விலைக்கு வாங்குமா? இல்லை அணியின் தொகை மேலும் அதிகரிக்கக் கூடுமா? என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
சேரி மொழி… குஷ்பு பிடிவாதம்… காங்கிரஸ் போராட்டம்!
அகற்றப்பட்ட ஆர்டர்லிகள்… எச்சரித்த முதல்வர்… .கைது ஆவாரா மாஜி டிஜிபி நட்ராஜ்?