பறிக்கப்படும் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி?

Published On:

| By Selvam

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் பிசிசிஐ நிர்வாகம் சில அதிரடி முடிவுகளை எடுக்க உள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்திய அணி தோல்விக்கு பல காரணங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. கேப்டன் பொறுப்பில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இந்திய அணி வீரர்களை தேர்வு செய்வதில் குளறுபடி இருந்ததாக கூறப்பட்டது.

bcci planning for different india captains in each of the formats

இதனால் நேற்று சேத்தன் சர்மா தலைமையிலான சீனியர் கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்யும் குழுவை பிசிசிஐ நீக்கியது.

தேர்வுக்குழுவில் இடம்பெற்ற சுனில் ஜோஷி, ஹர்விந்தர் சிங், தேபாஷிஷ் மோகண்டி ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

புதிதாக பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுள்ள ரோஜர் பின்னி, சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வு குழுவை முழுமையாக நீக்கியுள்ளார்.

மேலும், புதிய தேர்வுக் குழு உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளும் தொடங்கி உள்ளது. 7 டெஸ்ட் போட்டி, 30 முதல் தர போட்டிகள் மற்றும் 10 சர்வதேச போட்டிகள் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர்கள் இந்த பதவிக்கு போட்டியிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் தேர்வுக் குழு இந்திய அணியில் டி 20, ஒரு நாள், டெஸ்ட் போட்டிகளில் தனித்தனி கேப்டன்களை நியமிக்க உள்ளனர்.

தற்போது இந்திய அணியில் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் ரோகித் ஷர்மா கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

முன்னதாக விராட் கோலி மூன்று வகையான போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட்ட போது பணிச்சுமையை காரணம் காட்டி அவரிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டது.

bcci planning for different india captains in each of the formats

அதனை போல தற்போது டி 20 கேப்டன் பதவியை ரோகித் சர்மாவிடம் இருந்து ஹர்திக் பாண்டியாவிடம் வழங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா போன்ற ஆல் ரவுண்டர்கள் இந்திய அணியை வழி நடத்தினால், அணிக்கு மேலும் வலு சேர்க்கும் என பிசிசிஐ நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

மேலும், ஹர்திக் பாண்டியா ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணிக்கு தலைமை தாங்கிய முதல் சீசனிலேயே கோப்பையை பெற்றுக் கொடுத்தார்.

ரோகித் சர்மா இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

இதில் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2024-ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை வழிநடத்துவதற்கு முன்னெடுப்பாக ஹர்திக் பாண்டியாவிற்கு தற்போது கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.

செல்வம்

தெலங்கானா குதிரை பேரம்: சிக்குகிறாரா பாஜக தேசிய பொதுச்செயலாளர்?

பிடிஆரின் ஆங்கில வார்த்தை: விளக்கத்தை ஏற்க மறுத்த ஐ.பி.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel