விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்: ஆனால்…?

Published On:

| By christopher

Virat Kohli – Babar Azam: 2024 டி20 உலகக்கோப்பை தொடரில், பாகிஸ்தான் அணி நேற்று (ஜூன் 6) தனது முதல் போட்டியில் அமெரிக்கா அணியை எதிர்கொண்டது.

டல்லாஸில் நடைபெற்ற இப்போட்டியில், அமெரிக்கா அணி பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்றிலும் மிக சிறப்பாக செயல்பட, சூப்பர் ஓவர் வரை சென்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பாபர் அசாம் 44 (43) ரன்களை சேர்த்திருந்தார்.

இதன்மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் 4067 ரன்கள் சேர்த்துள்ள பாபர் அசாம், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.

தற்போது, இப்பட்டியலில் 118 போட்டிகளில் 4038 ரன்கள் சேர்த்துள்ள விராட் கோலி 2வது இடத்திலும், 152 போட்டிகளில் 4026 ரன்கள் சேர்த்துள்ள ரோகித் சர்மா 3வது இடத்திலும் உள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவுக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் 43 பந்துகள் விளையாடி 44 ரன்கள் மட்டுமே சேர்த்த பாபர் அசாமை, அவரது இந்த பொறுமையான ஆட்டத்திற்காக கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

டி20-யா? டெஸ்ட்டா?

ஒரு கிரிக்கெட் ரசிகர் எக்ஸ் தளத்தில், அமெரிக்காவில் ஐசிசி டி20 கிரிக்கெட்டை பிரபலப்படுத்த நினைத்தால், பாபர் அசாம் டெஸ்ட் கிரிக்கெட்டை பிரபல படுத்த முயற்சிக்கிறார் என பதிவிட்டுள்ளார்.

https://x.com/imYwani/status/1798770728147484890

இதேபோல, அவர் டி20 போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியதாக விமர்சித்து, பல பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://x.com/academy_dinda/status/1798752228871995558

https://x.com/TukTuk_Academy/status/1798750774992011417

இந்த ஆட்டம், உள்ளூர் நேரப்படி காலை 10:30 மணிக்கு துவங்கியது. இந்நிலையில், போட்டி துவங்கும் முன் இது குறித்து பேசிய பாபர் அசாம், “இப்போட்டி காலையில் நடைபெறுவதால், ஏதோ டெஸ்ட் போட்டியில் விளையாடுவது போல தோன்றுகிறது”, என தெரிவித்திருந்தார்.

ரசிகர்கள் அதை குறிப்பிட்டும் பாபர் அசாமை விமர்சித்து வருகின்றனர்.

https://x.com/_FaridKhan/status/1798732819163910200

அமெரிக்காவுக்கு எதிரான தனது முதல் டி20 உலகக்கோப்பை போட்டியில் தோல்வியடைந்த பாகிஸ்தான், தனது 2வது போட்டியில் இந்தியாவை ஜூன் 9 அன்று எதிர்கொள்கிறது.

ஏற்கனவே, அப்போட்டிக்கான எதிர்பார்ப்பு மிகுதியாக உள்ள நிலையில், இப்போட்டியில் பாகிஸ்தான் அடைந்த தோல்வியால், அந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

USA vs PAK: சொல்லி அடித்த அமெரிக்கா… சூப்பர் ஓவரில் வீழ்ந்த பாகிஸ்தான்

ஹெல்த் டிப்ஸ்: காரில் போகும்போது வரும் வாந்தி… தடுப்பது எப்படி?

பியூட்டி டிப்ஸ்: அழகுக்காக கான்டாக்ட் லென்ஸ் அணிபவரா நீங்கள்?

டாப் 10 நியூஸ் : பாஜக கூட்டணி முதல்வர்கள் கூட்டம் முதல் ராகுல்காந்தி வழக்கு வரை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel