இறுதிபோட்டிக்கு முன்னேறுமா இந்தியா? – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Published On:

| By Jegadeesh

Asian Champions Trophy 2023

கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கிய 7 வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் நாளை (ஆகஸ்ட் 12)  நிறைவுபெறுகிறது.

இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, கொரியா, ஜப்பான் ஆகிய ஐந்து அணிகள் பங்கேற்ற இந்த போட்டியின் லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடிந்து விட்டன.

அதன்படி கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இந்த தோல்வியை அடுத்து பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது.

Asian Champions Trophy 2023

லீக் சுற்றின் முடிவுகளின் படி 13 புள்ளிகளுடன் இந்திய அணி முதல் இடத்திலும், 12 புள்ளிகளுடன் மலேசியா 2-வது இடத்தையும் பிடித்தன. கொரியா 5 புள்ளிகளுடன் 3 -வது இடத்தையும், ஜப்பான் 4-வது இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 11) மாலை 6 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில்  மலேசிய அணியை நடப்பு சாம்பியனான கொரியா அணி எதிர்கொள்கிறது.

இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன.

ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் களம் காண இருப்பதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: காளான் புலாவ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share