15 வருட கிரிக்கெட் வாழ்க்கை: கோலி ஓடிய மொத்த தூரம் எவ்வளவு?

Published On:

| By Jegadeesh

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி நேற்றுடன் சர்வதேச கிரிக்கெட்டில் கால் தடம் பதித்து 15 வருடங்களை நிறைவு செய்துள்ளார். இத்தனை வருடங்களாக பல்வேறு சூழ்நிலைகளிலும் தனக்கு ஆறுதலாக இருக்கும் ரசிகர்களுக்கு கோலி நேற்று நன்றி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை அவர்  எடுத்துள்ள 25,354 ரன்களில் 13,748 ரன்களை சிங்கிள், டபுள், ட்ரிபிள் என  ஓடியே விராட் கோலி எடுத்துள்ளதாக  ‘ஈ.எஸ்.பி.என். க்ரிக் இன்ஃபோ’ இணையதளம் கூறியுள்ளது.

பல வருடங்களை கடந்தும் கிரிக்கெட்டில் 2 வெள்ளை கோட்டுக்கு இடையேயான 22 யார்ட்ஸ் தூரம் மட்டுமே இன்னும் மாறாமல் இருந்து வருகிறது. அந்த 22 யார்ட்ஸ்களை 13748 முறை ஓடி ஓடி தொட்டதன் மூலம் மட்டும் விராட் கோலி இதுவரை 276.57  கிலோமீட்டர் தூரம் ஓடியுள்ளார்.

 


அதே போல எதிர்ப்புறம் இருந்த போது தம்முடைய பார்ட்னர் பேட்ஸ்மேன்களுக்காக 11,606 ரன்களை ஓடி விராட் கோலி எடுத்துள்ளார்.

Virat Kohli turns for another lap of his 510km run around the globe  •  Getty Images

அந்த வகையில் 233.48 கிலோ மீட்டர் தூரம் ஓடியுள்ள விராட் கோலி ஒட்டுமொத்தமாக தம்முடைய 15 வருட சர்வதேச கேரியரில் 25, 354 முறை 22 யார்ட்ஸ்களை ஓடி  தொட்டுள்ளார்.

அதாவது தம்முடைய 15 வருட கேரியரில் சிங்கிள், டபுள், ட்ரிபிள் ரன்கள் எடுப்பதற்காக மட்டும் இதுவரை விராட் கோலி 510.04 கிலோ மீட்டர் ஓடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கிச்சன் கீர்த்தனா: கேரட் பூரி

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share