ெப்பமும் வறட்சியும் பாரபட்சமே இல்லாமல் தாக்கும் நேரம் இது. இந்தச் சூழலில், உடலைக் குளுமையாகப் பராமரிக்க வேண்டும். முக்கியமாக, சருமத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதற்காக அடிக்கடி தண்ணீர் அருந்துவதோடு, தாகத்தைப் போக்க சத்தானவற்றைச் சேர்த்துக்கொள்வதும் அவசியம். அதற்கு இந்த மஞ்சள் சோயா மில்க் உதவும்.
**என்ன தேவை?**
சோயா மில்க் – 2 கப் (கடைகளில் ரெடிமேடாகக் கிடைக்கும்)
தேன் அல்லது பனங்கற்கண்டு – 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்சாறு (பசுமஞ்சளை அரைத்து சாறு எடுக்கவும்) – 2 டீஸ்பூன்
இஞ்சிச்சாறு – ஒரு டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை
**எப்படிச் செய்வது?**
சோயா மில்க்கை வெதுவெதுப்பாகச் சூடாக்கவும். அதில் மற்ற பொருள்களைச் சேர்த்து 5 நிமிடங்களுக்கு மூடிவைக்கவும். பிறகு வடிகட்டவும். இத்துடன் சாக்கோ வால்நட் குக்கீஸைப் பரிமாறலாம்.
**[நேற்றைய ஸ்பெஷல்: வாழைப்பழம் வேர்க்கடலை மில்க்ஷேக்](https://minnambalam.com/public/2022/05/03/2/groundnut-milk-shake)**
.