கிச்சன் கீர்த்தனா: சோயா கோலா உருண்டை

Published On:

| By admin

eatballs என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கோலா உருண்டைகள் இந்திய துணை கண்டம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் பிரபலமான ஒரு உணவு வகை. இவை மாமிசம் சேர்க்காமலும் செய்யப்படுகிறது. அதற்கு சிறந்த உதாரணம் இந்த சோயா கோலா உருண்டை. அசைவ உணவைத் தவிர்ப்பவர்களுக்கான மாற்று உணவான இது அனைவருக்கும் ஏற்றது.

என்ன தேவை?

சோயா உருண்டைகள் – 2 கப்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
பூண்டு – 8 பற்கள்
பொட்டுக்கடலை – கால் கப்
சின்ன வெங்காயம் – 10
இஞ்சி – ஒரு துண்டு
கறிவேப்பிலை, புதினா – ஒரு கைப்பிடி
கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் – அரை கப்
மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

சோயாவை வெந்நீரில் உப்பு சேர்த்து 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு அதில் சோம்பு, கடலைப்பருப்பு, பச்சை மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம், இஞ்சி சேர்த்து வதக்கி,

பிறகு கறிவேப்பிலை, புதினா, பொட்டுக்கடலை மற்றும் தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கி, இறுதியாக மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துப் புரட்டி தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி ஆறியதும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

பிறகு ஊறிய சோயாவைப் பிழிந்து மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றிச் சேர்த்து நன்கு பிசைந்து, தேவைப்பட்டால் மட்டும் நீர் தெளித்து பிசையலாம். இதை உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுத்தால் சோயா கோலா உருண்டை தயார்.

**[சாப்பிட்டதும் டாய்லெட்டைத் தேடுகிறீர்களா?](https://minnambalam.com/public/2022/06/12/1/sunday-special)**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share