உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தில் ஜவுளித் துறையில் ரூ.19,000 கோடி முதலீட்டுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், ஜவுளித் துறையில் முதலீடு செய்வதற்காக பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து 67 பரிந்துரை கடிதங்கள் ஒன்றிய அரசுக்கு வந்தன. இதில் கின்னி பிலமென்ட்ஸ், கிம்பர்லி கிலார்க் இந்தியா லிட்., அர்விந்த் லிட் உள்ளிட்ட கம்பெனிகளின் 61 பரிந்துரைகளுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஒன்றிய அரசு அங்கீகரித்த இந்த 61 பரிந்துரைகளில், விண்ணப்பதாரர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் உத்தேச மொத்த முதலீடு ரூ.19,077 கோடி என ஒன்றிய ஜவுளித் துறை செயலாளர் யு.பி.சிங் கூறியுள்ளார். இதன் மூலம் 2.40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
**ராஜ்**
.