உலகின் முன்னணி இடத்திலுள்ள கோகோ கோலா நிறுவனம் முதன்முறையாக ஜப்பான் நாட்டில் மதுபானம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
125 ஆண்டுகளாகக் குளிர்பானங்கள் தயாரித்து விற்பனை செய்துவரும் கோகோ கோலா நிறுவனம், தற்போது மதுபானம் தயாரிப்பில் இறங்கியுள்ளது.
3%, 5% மற்றும் 7% ஆல்கஹால் கலந்து மூன்று விதமான பானங்களை அறிமுகம் செய்துள்ளது. இதில், எலுமிச்சை சுவை உள்ளதால் இளம் பெண்கள் அதிகளவில் விரும்புவார்கள் என அந்நிறுவனம் நம்பிக்கை கொண்டிருக்கிறது. ஜப்பானில் 350 மி.லி. கேன் விலை 150 யென். இந்திய மதிப்பில் இதனுடைய விலை ரூ.93.
ஜப்பானில் போட்டியில் சென்று கொண்டிருக்கும் சந்தையில், கோகோ கோலா நிறுவனம் நுழைந்துள்ளது. ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மதுபானம், விரைவில் மற்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என கோகோ கோலா நிறுவனம் தெரிவித்துள்ளது.�,