தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்து வருகிறது. இங்கு நடந்த பஞ்சு ஏலத்தில் விலை குறைவாக கேட்கப்பட்டதாகக் கூறி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில், பாபநாசம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பருத்தி விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின்போது நாளை (ஜூலை 1) மீண்டும் ஏலம் நடத்தப்படும் என சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
அதை ஏற்று விவசாயிகள் கலைந்து சென்றனர். இந்தச் சாலை மறியல் போராட்டம் காரணமாக பாபநாசம் – சாலியமங்கலம் சாலையில் சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
**-ராஜ்**
.