ஐபிஎல்: ப்ளே ஆஃப் சுற்றில் மாற்றம் செய்த பிசிசிஐ

Published On:

| By Balaji

ஐபிஎல் தொடர் பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் முடிவடையவுள்ள நிலையில் விரைவில் ப்ளே ஆஃப் சுற்றுகள் நடைபெறவுள்ளன.

ப்ளே ஆஃப் போட்டிகளுக்கு எந்தெந்த அணிகள் தகுதிபெறும் என்பது குறித்த விவாதம் ஒரு பக்கம் நடைபெற்று கொண்டிருக்க போட்டிகளை எப்போது தொடங்குவது என்பது குறித்த விவாதம் தொடங்கி முடிவு எட்டப்பட்டுள்ளது.

வார நாள்களில் இரவு எட்டு மணிக்கும் வார இறுதிநாள்களில் மாலை 4 மணிக்கும் போட்டிகள் தொடங்குகின்றன. இரவு எட்டு மணிக்கு போட்டி ஆரம்பமாவதால் நிறைவடைய நள்ளிரவைத் தாண்டிவிடுகிறது. இதனால் பனிப்பொழிவின் காரணமாக இரண்டாவதாக பந்துவீசும் அணிக்கு சிக்கல் உருவாகிறது. இதனால் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொள்ள நேர்கிறது. இதன் காரணமாக கடந்த போட்டிகளில் ரோஹித் ஷர்மா, அஸ்வின், ரஹானே ஆகியோருக்கு பந்துவீச அதிகநேரம் எடுத்துக்கொண்டமைக்காக ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ப்ளே-ஆஃப் சுற்றை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது.

லீக் போட்டிகளில் எட்டு அணிகள் பங்கேற்பதால் வார இறுதி நாள்களில் இரண்டு போட்டிகள் நடத்தவேண்டிய சூழல் நிலவுகிறது. ஆனால் ப்ளே ஆஃப் போட்டிகளில் ஒரு நாளில் ஒரு போட்டி மட்டுமே நடைபெறும். எனவே போட்டியை 8 மணிக்கு பதிலாக 7.30க்கு தொடங்க உச்ச நீதிமன்றம் அமைத்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகள் குழு முடிவு செய்துள்ளது.

மேலும், இந்திய ஏ அணியின் பயிற்சியாளராகவும், 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் பயிற்சியாளராகவும் ராகுல் டிராவிட்டை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel