விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஏழாவது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 27,421 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூலை 13) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக, நாம் தமிழர் கட்சிகளை பின்னுக்கு தள்ளி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
அதன்படி ஏழாவது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 44,780 வாக்குகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறார். அவரை தொடர்ந்து பாமக வேட்பாளர் சி.அன்புமணி 17,359 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 3,556 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால், விக்கிரவாண்டி தொகுதி மற்றும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வரிசைக்கட்டும் படங்கள்: போனியாகாத ஓடிடி… ‘வணங்கான்’ தப்புமா?
விக்கிரவாண்டி தேர்தல்: 19,000 வாக்கு வித்தியாசத்தில் அன்னியூர் சிவா முன்னிலை!