இதெல்லாம் நமக்குத் தேவையா கோபி? – அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு ஆபிஸ்ல பேசிக்கிட்டு இருந்தேன்.

“நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தா, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலையே தூக்கிருவோம்னு நம்ம சீமான் அண்ணன் சொல்லிருக்காரு” பார்த்தீங்களான்னு கேட்டேன்.

“அவரு ஆட்சிக்குல்லாம் வரமாட்டாரு. அதான் இவ்வளவு தைரியமா சொல்றாருன்னு” நண்பர் கமெண்ட் அடிச்சாப்ல…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி
இருநூறு கடிகாரத்தின் நேரங்கள் கூட ஒத்துப்போகும். மனைவிக்கும் மாமியாருக்கும் உள்ள உறவு மட்டும் பெரும்பாலும் ஒத்துப்போகாது
Mannar & company™
பெண்கள்கிட்ட ‘நல்லி’ன்னு சொன்னா நல்லி சில்க்ஸ் பட்டுப்புடவை கடையையும், ஆண்கள்கிட்ட ‘நல்லி’ன்னு சொன்னா கறிக்கடையையும் தான் சொல்லுவாங்க!
Naalai namathe 
எதுக்குனே அடிக்கிறீங்க! பின்ன என்னப்பா வாழை”படத்துக்கு டிக்கெட் வாங்க காசு குடுத்தா செவ்வாழை” பழத்தை வாங்கிட்டு வந்து நல்லா இருக்குதுன்னேனு சொல்றான்
ச ப் பா ணி
பெண்களுக்கு அதிகம் பிடித்த வார்த்தை “ம்”
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஞாயித்துகிழமைல பிரியாணி சாப்பிட்டதும் சாயங்காலம் வரை தூக்கம் வர்றதுல உள்ள முக்கியமான பெனிபிட் என்னன்னா, வெளிய போயி எதும் த‌ண்ட செலவு பண்ணாம காசு மிச்சம் ஆகறதுதான்.
கடைநிலை ஊழியன்
வாழ்க்கைல பிரச்சனை எல்லாம் youtube வர Ad மாதிரி தான்.. எப்ப வரும், எப்படி வரும் னு தெரியாது.. ஆனா கரெக்ட்டா வரும்.. அதுலயும் சிலத skip கூட பண்ண முடியாது !!
Mannar & company™
ஆண்கள் ப்ரஷர் குக்கர் மாதிரிதான் pressure அதிகமாக இருக்கும்போது தண்ணி ஊத்தினால் அடங்கிவிடுகிறார்கள்!
செங்காந்தள்
தீபாவளி ‘கரி’நாள் மட்டும் அல்ல… ‘கறி’ நாளும் கூட…!!!
ArulrajArun
எல்லா “நல்லா” இருக்கணும்னு நினைக்கிறவங்களுக்கு தான் எல்லா பிரச்சினையும் “நல்லாவே” நடக்குது
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
இப்பகூட நம்ம ஞாயித்துகிழமை சாயங்காலத்துல தானே இருக்கோம், ஆனா எனக்கென்னமோ திங்கட்கிழமை ஆபிஸ்ல படி ஏறி நடந்துட்டு இருக்க மாதிரியே ஒரு பீலிங்கு..
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel