அதிமுக மாநாடு: அண்ணாவின் பொன்மொழியால் விமர்சிக்கும் டிடிவி

Published On:

| By Jegadeesh

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ’வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு’ என்ற பெயரில் நாளை (ஆகஸ்ட் 20) மதுரையில் மாநாடு நடக்க இருக்கிறது.

இந்நிலையில், நாளை நடைபெற உள்ள இந்த மாநாட்டை பேரறிஞர் அண்ணாவின் பழமொழியை மேற்கோள் காட்டி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (ஆகஸ்ட் 19) வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ”அன்றைய காலகட்டத்தில் பெரும் பணம் செலவழித்து கட்சி ஒன்று, சென்னை ஆவடியில் நடத்த இருந்த மாநாடு பற்றிய பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் இன்று நடக்கவுள்ள துரோகிகளின் மாநாட்டோடு பொருந்துவது போல் உள்ளது.

“தம்பி பெரும் பணம் செலவழித்து, தோரணங்களும் தோகைகளும் ஓவியங்களும் கொண்டு மாநாடு நடத்தி பயன் எதுவும் வராது.

திறமை மிக்க ஓவியன் ஒருவன் காட்டில் உள்ள நல்ல கனி தரும் மரங்களை அப்படியே நம் கண்முன்னே கனிகள் காய்த்து தொங்குவதை போல் ஓவியமாக வரைந்தான் . அனைவரும் கண்டு மெய்சிலிர்த்து வியந்தனர்.

ஆனால் தம்பி, அந்த ஓவியத்தில் உள்ள கனிகளை கண்டு ரசிக்க தான் முடியுமே தவிர அதனை உண்டு நம் பசியை போக்க முடியாது.

அதே போன்று தான் தம்பி பெரும் பணம் மட்டுமே செலவழித்து நடத்தப்படும் மாநாடுகள் மக்களிடம் துளியும் நம்பிக்கை பெறாது, அவை அனைத்தும் பயனற்றது”.

“சாதனைகளைக் காட்டி ஓட்டு வாங்கிட முடியாது என்றாலும் நோட்டுகளைக் காட்டி ஓட்டுகளை வாங்கிடலாம் என்ற துணிவு தான் தம்பி அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை”. என்று கூறி எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

15 வருட கிரிக்கெட் வாழ்க்கை: கோலி ஓடிய மொத்த தூரம் எவ்வளவு?

குல்பி ஐஸ் சாப்பிட்ட 85 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share