இந்திய உணர்வோடு உச்ச நீதிமன்றம் செயல்படவில்லை: காங்கிரஸ்!

Published On:

| By Kavi

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மீதமுள்ள 6 பேரையும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

எழுவர் விடுதலை தொடர்பான வழக்கில், 2018 செப்டம்பர் 6ஆம் தேதி வெளியான உச்ச நீதிமன்ற தீர்ப்பில்,

அரசியல் சாசனத்தின் 161ஆவது பிரிவின் கீழ் ஏழு பேரின் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்கலாம் என அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது.

இதையடுத்து அப்போதைய அதிமுக அரசு அமைச்சரவையைக் கூட்டி எழுவரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் 4 ஆண்டுகள் ஆகியும் அந்த தீர்மானத்தின் மீது இதுவரை ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இதனிடையே கடந்த மே 18ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தனக்குரிய சிறப்பு அதிகாரம் 142-ஐ பயன்படுத்தி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனை விடுதலை செய்தது.

அந்த அடிப்படையில் ராஜீவ் கொலை வழக்கின் தண்டனை கைதிகளான நளினி ரவிச்சந்திரன் இருவரும் தங்களையும் விடுதலை செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

இந்த வழக்கை இன்று (நவம்பர் 11) விசாரித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்னா அமர்வு மீதமுள்ள 6 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பு குறித்து காங்கிரஸ் கருத்து என்னவாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், இந்த தீர்ப்பு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் தவறானது.

காங்கிரஸ் இதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இந்திய உணர்வோடு உச்ச நீதிமன்றம் செயல்படவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரியா

6 பேர் விடுதலை : ஆளுநர் செய்த தவறு! – ராமதாஸ்

ஆளுநருக்கு சுயமரியாதை இருந்தால்? – கொளத்தூர் மணி காட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel