டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

top ten news today in Tamil march 9 2024

புதிய திட்டங்களுக்கு அடிக்கல்!

அசாம் மாநிலத்தில் இன்று (மார்ச் 9) ரூ.18,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

நூல் வெளியீட்டு விழா!

கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு கலைஞர் தமிழ் ஆய்வு இருக்கை சார்பில் 100 நூல்களை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.

ராமேஸ்வரம் கஃபே திறப்பு!

பெங்களூருவில் குண்டுவெடிப்பு நடந்த ராமேஸ்வரம் கஃபே உணவகம் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது.

நீட் தேர்வு!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றுடன் காலக்கெடு நிறைவடைகிறது.

போக்குவரத்து மாற்றம்!

மெட்ரோ ரயில் நிலைய கட்டுமான பணிகள் காரணமாக, சென்னை அண்ணா மேம்பாலம் மெட்ரோ ரயில் நிலையம், நுங்கம்பாக்கம் மெட்ரோ நிலையம், ஸ்டெர்லிங் சாலை மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய இடங்களில் இன்றும் நாளையும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம்!

தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கதேசம் , இலங்கை மோதல்!

இன்றைய ஐசிசி டி20 மூன்றாவது கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் , இலங்கை அணிகள் மோதுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 658-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

டான்செட் நுழைவுத்தேர்வு!

எம்.பி.ஏ, எம்.சி.ஏ ஆகிய முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத்தேர்வு இன்று நடைபெறுகிறது.

பெண்கள் பிரிமியர் லீக்!

இன்றைய பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: சீஸ் ஸ்டஃப்டு குடமிளகாய்

வுமன்ஸ் டே விஷ் கூட பேக் ஐடிக்கு தானா? : அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel