டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

top ten news today in Tamil march 7 2024

top ten news today in Tamil march 7 2024

வளர்ச்சி திட்ட பணிகள்!

ஜம்மு காஷ்மீரில் ரு.5,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 7) தொடங்கி வைக்கிறார்.

காங்கிரஸ் ஆலோசனை!

நாடாளுமன்ற வேட்பாளர் தேர்வு தொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் டெல்லியில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.

மதிமுக கூட்டம்!

மதிமுகவின் அவசர நிர்வாக கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.

அமைதி பேரணி!

புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, இந்தியா கூட்டணி சார்பில் இன்று அமைதி பேரணி நடைபெறுகிறது.

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

தேர்தல் பத்திர நன்கொடை வழங்கியவர்களின் பட்டியலை வெளியிட எஸ்பிஐ கால அவகாசம் கேட்டிருப்பதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்பிஐ வங்கி முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 656-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

இந்தியா, இங்கிலாந்து மோதல்!

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.

தங்கமணி ரிலீஸ்!

சதீஷ் ரகுநந்தன் இயக்கத்தில் திலீப் நடிக்கும் தங்கமணி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

யுபி வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ் மோதல்!

இன்றைய பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் யுபி வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: பச்சை மிளகாய் ஊறுகாய்

சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: குற்றவாளி நடத்திய நாடகம்… புதுச்சேரியில் நடந்தது என்ன?

உக்ரைன் அதிபரை விட உக்கிரமா இருக்காரய்யா… அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை: திமுக கூட்டணியில் இருந்து புறப்படுகிறாரா வைகோ? 4 எம்.எல்.ஏ.க்களை மடக்கும் அமைச்சர்கள்!

top ten news today in Tamil march 7 2024

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share