தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இன்று (ஜனவரி 9) 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது.
பொங்கல் பரிசு!
2023ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
திருப்பதி சிறப்பு டிக்கெட்!
ஜனவரி 12ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வரை, இரு மாதங்களுக்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் இன்று வெளியிட உள்ளது.
மத்திய குழு ஆய்வு!
உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரம் மண்ணில் புதையும் தருவாயில் உள்ள நிலையில் மத்திய குழு அங்கு சென்று இன்று ஆய்வு நடத்த உள்ளது.
தொழில் நிறுவன முதலீட்டாளர்கள் மாநாடு!
தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மற்றும் புதுமை படைப்பு முதலீட்டாளர்கள் மாநாடு இன்று சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெறுகிறது.
வழக்கறிஞர் சங்க தேர்தல்!
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தேர்தல் இன்று நடைபெற உள்ளது.
சசிகலா புரட்சி பயணம்!
சசிகலா கொளப்பாக்கம் பகுதியில் இருந்து இன்று தனது புரட்சி பயணத்தை தொடங்குகிறார்.
துப்பாக்கி சுடும் போட்டி!
போலீசார் கலந்து கொள்ளும் தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி இன்று வண்டலூர் அருகே உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் தொடங்குகிறது.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் இன்று 232-ஆவது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24 -க்கும் விற்பனையாகிறது.
குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
2014 முதல் சுயத்தை இழந்தது உச்சநீதிமன்றம்: உடைத்துப் பேசிய முன்னாள் நீதிபதி
ட்விட்டரில் வர உள்ள அதிரடி மாற்றங்கள் : எலான் மஸ்க் அறிவிப்பு
Comments are closed.