டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

சூடானில் போர் நிறுத்த ஒப்பந்தம்!

சூடான் நாட்டில் மோதலில் ஈடுபட்டு வரும் ராணுவ படை மற்றும் துணை ராணுவ படை இன்று (மே 3) முதல் மே 11-ஆம் தேதி வரை போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு சம்மதம் வழங்கியுள்ளனர்.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு கோவாவில் இன்று தொடங்குகிறது.

மனோபாலா உடல் இறுதிச்சடங்கு!

உடல்நலக்குறைவால் காலமான இயக்குநரும் நடிகருமான மனோ பாலா உடல் வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்படுகிறது.

கண்ணகி சிலை மரியாதை!

பூம்புகார் கடற்கரையில் அமைந்துள்ள கண்ணகி சிலைக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை பெளர்ணமி கிரிவலம் இன்று தொடங்கி நாளை நிறைவடைகிறது.

கள்ளழகர் எதிர்சேவை!

மதுரை அழகர் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் எதிர்சேவை இன்று நடைபெறுகிறது.

வானிலை நிலவரம்!

தமிழகத்தில் இன்று துவங்கும் அக்னி நட்சத்திரம் மே 28-ஆம் தேதி வரை நீடிக்க உள்ளது.

ஹைதராபாத், கொல்கத்தா மோதல்!

இன்றைய ஐபிஎல் டி 20 கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 348-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 220 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 2,079 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிச்சன் கீர்த்தனா: பலாப்பழ பருப்பு பாயசம்

’என் மனம் உடைந்துவிட்டது’: மனோபாலா மறைவால் தேம்பி அழுத ராதிகா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel