டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Kavi

Top Ten News in Tamil December 9 2023

Top Ten News in Tamil December 9 2023

மத்திய இணையமைச்சர் சென்னை வருகை!

மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய  இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இன்று (டிசம்பர் 9) சென்னை வருகிறார்.

மருத்துவ முகாம்!

தமிழ்நாடு முழுவதும் இன்று 3000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளது.

தெலங்கானாவில் இலவச பயணம்!

தெலங்கானாவில் பெண்கள், திருநங்கைகள் அனைவரும் இன்று முதல் அரசுப் பேருந்துகளில் பயணிக்க கட்டணம் இல்லை என அம்மாநில காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் – இங்கிலாந்து அணிகள் போட்டி!

வெஸ்ட் இண்டீஸ் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

சாதிவாரி கணக்கெடுப்பு!

பிகாரைத் தொடர்ந்து இன்று ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு பணி தொடங்கவுள்ளது.

பிரதமர் நிகழ்ச்சி!

பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் 12:30 மணிக்கு நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையின் பயனாளிகளுடன் வீடியோ காணொலி மூலம் கலந்துரையாடுவதுடன் இந்நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ளார்.

சோனியா காந்தி பிறந்தநாள்!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று தனது 77 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியல்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க டிசம்பர் 9 ஆம் தேதியான இன்று இறுதிநாளாகும்.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 567வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தேர்தல் வெள்ளம் பாயும்போது தெரியலையா? – அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை: அவசர டெல்லி பயணம்… அமித் ஷாவை சந்திக்கும் உதயநிதி

ரித்திக் ரோஷனின் ஃபைட்டர் டீசர் வெளியானது: ஸ்பெஷல் என்ன?

விரைவில் இன்சூரன்ஸ் : கார், பைக் உரிமையாளர்களுக்கு ஆறுதல் செய்தி!

Top Ten News in Tamil December 9 2023

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel