டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

top ten news august 27 2023

மனதின் குரல் நிகழ்ச்சி!

பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 27) மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடையே  உரையாற்றுகிறார்.

தெலங்கானா பாஜக பேரணி!

தெலங்கானா கம்மத்தில் இன்று பாஜக சார்பில் நடைபெறும் பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார்.

செல்வராஜ் எம்.பி இல்ல திருமண விழா!

திருவாரூர் பவித்ரமாணிக்கத்தில் செல்வராஜ் எம்.பி இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் இன்று கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்.

மதுரை ரயில் தீ விபத்து!

மதுரை சுற்றுலா ரயில் தீ விபத்தில் உயிர் தப்பிய பயணிகள் மதுரையிலிருந்து விமானம் மூலம் இன்று லக்னோ திரும்புகின்றனர்.

பறக்கும் ரயில் சேவை ரத்து!

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே நான்காம் வழித்தட பாதை அமைக்கும் பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை இடையே இன்று முதல் பறக்கும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

ஹேப்பி ஸ்ட்ரீட்!

சென்னை அண்ணா சாலையில் இன்று ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 462-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மகளிர் தொழில்முனைவோர் கருத்தரங்கம்!

மகளிர் தொழில்முனைவோர் நல சங்கம் சார்பில் தூத்துக்குடியில் இன்று கருத்தரங்கம் மற்றும் கைத்தொழில் பயிற்சி நடைபெற உள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்!

திருவண்ணாமலையில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

சைக்ளிங் சாம்பியன்ஷிப் போட்டி!

மதுரை மேலூரில் இன்று சைக்ளிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது.

கிச்சன் கீர்த்தனா: சமைத்த உணவை சூடுபடுத்திச் சாப்பிடுபவரா நீங்கள்?

வேலைவாய்ப்பு : ஐ.ஏ.ஏ.டி- யில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel