இந்து சமய அறநிலையத்துறை திருமண நிகழ்ச்சி!
சென்னை, திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில், 30 இணையர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 4) திருமணம் நடத்தி வைக்கிறார்.
ஆந்திரா அரசுப்பயணம்!
ஆந்திர மாநிலத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று ஆந்திரா செல்கிறார்.
டெல்லி மாநகராட்சி தேர்தல்!
டெல்லியில் உள்ள 250 வார்டுகளில் இன்று மாநகராட்சி தேர்தல் நடைபெறுகிறது.
வாரிசு பாடல்!
வாரிசு திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் பாடிய தீ தளபதி பாடல் இன்று வெளியாகிறது.
ஜி – 20 கூட்டம்!
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இன்று ஜி-20 அமைப்பில் கலந்து கொள்ளும் உறுப்பு நாடுகளின் பொறுப்பாளர்கள் பங்கேற்கும் முதலாவது கூட்டம் தொடங்குகிறது.
கிராம உதவியாளர் தேர்வு!
இன்று தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெறுகிறது.
இந்தியா – வங்கதேசம் மோதல்!
இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 197-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
திருவண்ணாமலை ஆன்லைன் டிக்கெட்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் டிசம்பர் 6-ஆம் தேதி பரணி தீபம், மகா தீபம் தரிசனம் செய்வதற்கான டிக்கெட் பெற இன்று முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
ஹன்சிகா திருமணம்!
இன்று நடிகை ஹன்சிகாவுக்கும் அவரது பிசினஸ் பார்ட்னரான சோஹைல் கதுரியாவுக்கும் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் திருமணம் நடைபெற உள்ளது.