டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By christopher

top 10 news today Tamil February 18 2024

top 10 news today Tamil February 18 2024

நெல்லையில் பேருந்து நிலையம் திறப்பு!

நெல்லையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியார் பேருந்து நிலையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 18) திறந்து வைக்கிறார்.

44 மின்சார ரயில்கள் ரத்து!

கோடம்பாக்கம் – தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக இன்று செங்கல்பட்டு – கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.

கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்!

44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தாம்பரம் – சென்னை கடற்கரை வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் இன்று கூடுதலாக 150 மாநகர பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்!

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களுக்கு எதிராக நடைபெறும் அட்டூழியங்களை கண்டித்து இன்று முதல் தங்களுடைய படகுகளில் கருப்பு கொடிக் கட்டி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் ஈடுபட உள்ளனர்.

4-ம் கட்ட பேச்சுவார்த்தை

டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் சங்கத்தினர் – மத்திய அமைச்சர்கள் இடையே 4-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து முன்னாள் பிரதமர் விடுதலை!

ஊழல் வழக்கில் கைதாகி பாங்காக் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா இன்று விடுதலை செய்யப்பட உள்ளார்.

போக்குவரத்து அதிரடி மாற்றம்!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் அடையார் இந்திரா நகரில் நடைபெற உள்ளதால், இப்பணிகளைக் கருத்தில் கொண்டு ஓ.எம்.ஆர். சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இசைக்கலைஞர்கள் சங்கத் தேர்தல்!

தமிழ் சினிமா இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கான தேர்தல் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெற உள்ளது.

60+ உலகக் கோப்பை கிரிக்கெட்!

வி.சி.ஐ., எனும், வெடரன் கிரிக்கெட் இந்தியா அமைப்பு சார்பில், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான இரண்டாவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் துவக்கவிழா சென்னையில் இன்று மாலை 3:00 மணிக்கு வி.ஜி.பி., ரிசார்ட் வளாகத்தில் நடக்கிறது.

மும்பை சிட்டி – பெங்களூரு எப்.சி மோதல்!

பத்தாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடரில் மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மும்பை சிட்டி – பெங்களூரு எப்.சி. அணிகள் மோத உள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: இனி நகங்களைப் பராமரிப்பது ஈஸி!

சண்டே ஸ்பெஷல்: சத்துகள் வீணாகாமல் கீரைகளை சமைப்பது எப்படி?

top 10 news today Tamil February 18 2024

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share