டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By christopher

டெல்லி புறப்படும் ஆளுநர்! top 10 news today march 14 2024

பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவியேற்பு செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் அனுப்பியிருந்த நிலையில், ஆளுநர் ரவி திடீரென 3 நாள் பயணமாக இன்று (மார்ச் 14) காலை டெல்லி புறப்படுகிறார்,

புதிய தேர்தல் ஆணையர் நியமனம்?

இந்திய தேர்தல் ஆணையத்தில் 2 இடங்கள் காலியாக உள்ள நிலையில் புதிய தேர்தல் ஆணையர்களை நியமிக்க பிரதமர் மோடி தலைமையிலான குழு டெல்லியில் இன்று கூடுகிறது.

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணை!

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி தேர்தல் ஆணையத்துக்கு எதிராக தாக்கல் செய்த மனு மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

இந்தியாவில் பூடான் பிரதமர்!

தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இன்று இந்தியா வரும் பூடான் நாட்டின் புதிய பிரதமர் ஷேரிங் டோப்கே,  ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடியை டெல்லியில் சந்திக்க உள்ளார்.

அதிமுக – தேமுதிக இறுதி கட்ட பேச்சுவார்த்தை!

தே.மு.தி.க. தொகுதி பங்கீட்டு குழுவினருடன் இறுதி கட்ட பேச்சுவார்த்தையை இன்று நடத்த அதிமுக முடிவு செய்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திற்கு விடுமுறை!

மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு இன்று ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை – ராஜஸ்தான் ரயில்சேவை!

கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பஹத்ஹிகோதி ரயில் நிலையத்துக்கு இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரஞ்சி கோப்பை : கடைசி நாள்!

89-வது ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை – விதர்பா அணிகள் இடையேயான இறுதிப்போட்டியின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மும்பை வெற்றி பெற இன்னும் 5 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். அதே சமயம் விதர்பா வெற்றி பெற 290 ரன்கள் அடிக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 663வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.

அமீர்கான் பிறந்தநாள் இன்று!

பாலிவுட் உலகில் உச்ச நட்சத்திர நடிகரான அமீர்கான் தனது 59வது பிறந்த நாள் இன்று கொண்டாடுகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : காஞ்சிபுரம் இட்லி… மிளகு ஸ்பெஷல்!

திருக்கோவிலூர் வட போச்சே…. அப்டேட் குமாருop 10 news today march 14 2024

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel