டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By christopher

காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்!

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் குறித்த பட்டியல் இன்று (மார்ச் 21) வெளியாகிறது.

பொன்முடி வழக்கு இன்று விசாரணை!

பொன்முடியை அமைச்சராக நியமிக்க கவர்னர் மறுத்தது தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

தேர்தல் இலவசங்களுக்கு எதிராக மனு!

தேர்தல்கள் நடைபெறும்போது வாக்காளர்களைக் கவர, அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொள்ள உள்ளது.

சர்வதேச வன தினம்!

உலகில் காடுகளின் முக்கியத்துவத்தை உணரும் வகையில் இன்று சர்வதேச வன தினம் கொண்டாடப்படுகிறது.

திருவாரூர் ஆழித் தேரோட்டம்!

ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் ஆழித் தேரோட்டம் இன்று நடக்கிறது.

இந்தியா – ஆப்கான் மோதல்!

சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் மைதானத்தில் இன்று நடக்கும் உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

வாலிபால் இறுதிப்போட்டி!

3-வது பிரைம் வாலிபால் லீக் தொடரில் டெல்லி மற்றும் கோழிக்கோடு இடையிலான இறுதிப்போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.

அருணாச்சலில் நிலநடுக்கம்!

அருணாசல பிரதேசத்தின் மேற்கு காமெங் நகரில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று விலை மாற்றமின்றி  ஒரு லிட்டர் பெட்ரோல் 100.75 ரூபாய்க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனையாகிறது

மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கிச்சன் கீர்த்தனா: பூண்டு ஊறுகாய்

டிஜிட்டல் திண்ணை: எம் பி சீட் அதிருப்தி… திமுக மாவட்டச் செயலாளர் ராஜினாமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel