பட்டமளிப்பு விழா!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 11)கலந்து கொள்கிறார்.
விவசாயிகளுக்கு மின் இணைப்பு!
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் விவசாயிகளுக்கு 50,000புதிய மின் இணைப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்.
வந்தே பாரத் ரயில்!
சென்னை – மைசூர் இடையே வந்தே பாரத் ரயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைக்கிறார்.
சவுக்கு சங்கர் வழக்கு!
6மாத சிறைத் தண்டனையை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
கனமழை விடுமுறை!
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஏஜென்ட் கண்ணாயிரம் டிரைலர்!
மனோஜ் பீதா இயக்கத்தில் சந்தானம் நடித்த ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் டிரைலர் இன்று மாலை 5மணிக்கு வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 174-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
திருப்பதி டிக்கெட்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட் இன்று காலை 10 மணியளவில் இணையதளம் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம்.
புரோ கபடி போட்டி!
புரோ கபடி போட்டியில் இன்று யுபி யோதா, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன. மற்ற இரு போட்டிகளில் யு மும்பா, புனேரி பால்டன் மற்றும் பாட்னா பைரேட்ஸ் மற்றும் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.
மிரள் திரைப்படம் வெளியீடு!
சக்திவேல் இயக்கத்தில் பரத் நடித்துள்ள மிரள் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.