டாப் 10 செய்திகள் : இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் முதல் சபரிமலை நடைதிறப்பு வரை!

Published On:

| By Kavi

திமுக பணிக்குழு கூட்டம்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணிகளை கண்காணிக்க திமுக சார்பில் மூத்த அமைச்சர்கள் அடங்கிய பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழு இன்று(ஜூன் 14) ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெறும் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க உள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பு மனுதாக்கல்!

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி ஜூன் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஆம்னி பேருந்துகளை இயக்க அவகாசம்!

வெளிமாநில பதிவு எண் கொண்ட 500க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை தமிழகத்துக்குள் இயக்க இன்று முதல் தடை விதிக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்திருந்தது. இந்த சூழலில் நேற்று, ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் போக்குவரத்து துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், வார விடுமுறை மற்றும் பக்ரீத் விடுமுறையை கருத்தில் கொண்டு 17ஆம் தேதி வரை வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கடலுக்கு செல்லும் மீனவர்கள்!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கி 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது. இது கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலம் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் இருந்தனர். இந்த தடைக்காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் சென்னை, கடலூர், ராமேஸ்வரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து மீனவர்கள்  கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தயாராகி வருகின்றனர்.

சபரிமலை கோயில் நடைதிறப்பு!

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.

கோவையில் உதயநிதி

கட்சிப் பணிகள் குறித்து மண்டலம் வாரியாக ஆலோசனை நடத்தி வரும் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், இன்று நீலகிரி,கோவை, திருப்பூர் மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.கோவையில் உள்ள லீ-மெரிடியன் ஹோட்டலில் இந்த ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது.

குவைத்தில் உயிரிழந்தவர்கள் உடல்கள் வருகை!

குவைத் நாட்டின் தெற்கு அஹ்மதி அருகே மங்காஃப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 45 பேர் பலியாகினர். இவர்களது உடல் இன்று டெல்லி கொண்டுவரப்படுகிறது.

மருத்துவர் சுப்பையா கொலை – தூக்கு தண்டனைக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு!

தமிழ்நாட்டை உலுக்கிய மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி 7 குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

பெட்ரோல் டீசல் விலை! 

சென்னையில் 90வது நாளாக எந்த மாற்றமும் இன்றி பெட்ரோல் லிட்டருக்கு 100.75 ரூபாய்க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மழை அப்டேட்! 

சென்னையில் இன்றும் நாளையும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று  வானிலை மையம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிஜிட்டல் திண்ணை: விக்கிரவாண்டி இடைத் தேர்தல்… போட்டியா-புறக்கணிப்பா? தைலாபுரம் தோட்டத்தில் நடந்தது என்ன? -காத்திருக்கும் எடப்பாடி

வச்சான் பாரு ஆங்கிள்– அப்டேட் குமாரு

தமிழிசை – அண்ணாமலை… ஒன்றாக போஸ் கொடுக்க உத்தரவு!

அமித்ஷா சொன்னது என்ன? தமிழிசை விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel