10 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை!
வளிமண்டல சுழற்சி காரணமாக, கோவை, நீலகிரி, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில், இன்று (அக்டோபர் 9) கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம், ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
உருவாகிறது புயல் சின்னம்!
அரபிக்கடலில் இன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மெரினா நீச்சல் குளம் திறப்பு!
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்த 82 ஆண்டு பழமையான மெரினா நீச்சல் குளம் புதுப்பிக்கப்பட்டு இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.
விற்பனைக்கு வரும் புதிய சொகுசு கார்!
உலக புகழ்பெற்ற ஆடம்பர கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz)-இன் இ-கிளாஸ் எல்டபிள்யூபி (E-Class LWB) புதிய தலைமுறை (New gen) ஆடம்பர கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு வருகிறது.
சிறப்பு பஸ்கள் இயக்கம்!
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்றும், நாளையும் சென்னையில் இருந்து மட்டும் 2 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
விற்பனைக்கு வரும் R9 பைக்!
புதிய R9 பைக்கை உலகளவில் இன்று வெளியிடவிருக்கிறது யமஹா நிறுவனம்.
இலங்கையுடன் மோதும் இந்திய மகளிர் அணி!
மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு இலங்கையுடன் பலப்பரீட்சை நடத்துகிறது இந்திய மகளிர் அணி.
தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!
வங்கதேச அணிக்கு எதிராக டெல்லியில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் 2வது டி20 போட்டியை வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 206வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.34 -ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சே குவாரா நினைவு தினம்!
பிரபல சோசலிசப் புரட்சியாளரான சே குவேரா கொல்லப்பட்ட 57ஆம் ஆண்டு நினைவு தினம் உலகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : டேட்ஸ் எள்ளு உருண்டை
டிஜிட்டல் திண்ணை: பொறுப்பு அமைச்சர்கள் மாற்றம்… மா.செ.க்கள் மாற்றத்துக்கு முன்னோட்டம்?