தமிழ்நாட்டுக்கே இன்று தீபாவளி தான்: எஸ்.பி.வேலுமணி

Published On:

| By christopher

எடப்பாடி பழனிசாமியை தேர்தல் கமிஷன் இன்று அங்கீகரித்துள்ளது தமிழ்நாட்டுக்கே ஒரு தீபாவளி போன்ற நல்ல நாள் தான்.” என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், “எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் கட்சியை கட்டிக்காத்து வரும் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னால் அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும் நிற்கிறார்கள்.

அதன் அடிப்படையில் தான் தேர்தல் ஆணையம் தற்போது எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ளது.

நான்கரை ஆண்டுகாலம் அற்புதமான ஆட்சியை கொடுத்து, அதில் பல்வேறு மக்களுக்கான திட்டங்களை கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி. இன்றும் தமிழ்நாட்டின் எல்லா கிராமத்திலும் எடப்பாடி முதல்வராக வருவதை எதிர்பார்த்து நிற்கின்றனர்.

இந்நிலையில் தேர்தல் கமிஷன் இன்று அங்கீகரித்துள்ளது தமிழ்நாட்டுக்கே ஒரு தீபாவளி போன்ற நல்ல நாள் தான். அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி தமிழக மக்கள் அனைவருக்குமே இது மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

அதிமுக பொதுச்செயலாளர்: எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்!

உதயநிதி, சபரீசன் பற்றி  பிடிஆர் குரலில் பரவும் ஆடியோ புயல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share