முறைகேடு புகார்: எடப்பாடியிடம் விசாரணை நடத்த அனுமதி!

Published On:

| By christopher

முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு இன்று (ஏப்ரல் 8) அனுமதி அளித்துள்ளது.

ஜெயலலிதா மறைவையடுத்து தற்போதைய அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். 2017ம் ஆண்டு முதல் 2021 வரை அவர் முதல்வராக இருந்த அதிமுக ஆட்சியில் 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன.

அதில் மத்திய சுகாதாரத்துறையின் வழிகாட்டல்களை பின்பற்றவில்லை என்று புகார் எழுந்தது. அப்போது முன்னாள் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்தார். மருத்துவமனைகள் கட்டுவதற்கான ஒப்பந்தம் வழங்குவதற்கு பொதுப்பணித்துறை தான் அனுமதி பெற்றிருந்தது.

சுமார் ரூ. 4 ஆயிரம் கோடி மதிப்புடைய இந்த மருத்துவமனைகள் கட்டும் திட்டத்தில் விதிமுறை மீறலுக்கான ஆதாரங்கள் இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு ஊழியர் மீதான முறைகேடு குறித்து விசாரிக்க தமிழ்நாடு அரசிடம் அனுமதி பெற வேண்டும்.

அதன்படி அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு அரசிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி கோரியிருந்தது.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி மீதான விரிவான விசாரணைக்கு தமிழ்நாடு அரசு இன்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுமதி கொடுத்துள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

IPL 2023: டாஸ் வென்று லக்னோவிடம் வெற்றியை பறிகொடுத்த ஐதராபாத்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share