அமைச்சரவை கூட்டம் : விவாதித்தது என்ன?

Published On:

| By Kavi

இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கிய தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்தது.

அடுத்த மாதம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் செப்டம்பர் 26 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலை 9.30 மணிக்குத் தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.

இதில் எதிர்வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இயற்றப்படும் சட்டங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை விதிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும்,

ஆளுநரிடம் நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்கள், புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது, வேலைவாய்ப்பு ஆகியவை குறித்தும்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரை மணி நேரம் நீடித்த இந்த கூட்டம் 10 மணிக்கு நிறைவு பெற்றது.
பிரியா

ராஜஸ்தான் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி: சோனியா போட்ட உத்தரவு!

பொன்னியின் செல்வன்: ஜோராக விற்பனையான டிக்கெட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel