திமுகவிடம் வேல்முருகன் வைத்த இரண்டு டிமாண்ட்!

Published On:

| By Selvam

Tamilaga Valvurimai katchi demand 1 lok sabha seat to dmk

வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை திமுக தொகுதி பங்கீட்டு குழுவிடம் முன்வைத்திருப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று (மார்ச் 2) தெரிவித்தார்.

திமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவுடன் தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி இன்று பேச்சுவார்த்தை நடத்தின.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,

“திமுக தலைமையிலான கூட்டணியில் கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் தமிழக வாழ்வுரிமை கட்சி தொடர்ந்து பயணித்து வருகிறது.

அந்தவகையில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கி தர வேண்டும் என்ற வேண்டுகோளை டி.ஆர் பாலு அண்ணன் தலைமையிலான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவிடம் முன்வைத்திருக்கிறேன்.

அதற்கான நியாயமான காரணங்களையும் எடுத்து வைத்திருக்கிறேன்.

கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான இடங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்து கூட்டணியின் வெற்றிக்கு பங்காற்றியிருக்கிறேன்.

அந்தவகையில், தமிழக சட்டமன்றத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் குரல் எப்படி ஒலிக்கிறதோ, அதேபோல நாடாளுமன்றத்திலும் ஒலிக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தையும், கட்சியின் பொதுக்குழு தீர்மானத்தையும் திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் ஒப்படைத்திருக்கிறேன்.

அவர்கள் இந்த செய்தியை உடனடியாக தமிழ்நாடு முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் சென்று உங்களுக்கு நல்ல பதிலை தருகிறோம் என்று தெரிவித்திருக்கிறார்கள். தமிழகத்தில் எந்த தொகுதியை ஒதுக்கினாலும், தேர்தலை சந்திப்பதற்கு தயாராக உள்ளோம்.

மேலும், தேர்தல் பேச்சுவார்த்தை குழுவிடம் இன்னொரு மிக முக்கியமான வேண்டுகோளை முன்வைத்திருக்கிறேன்.

இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட வேண்டும்.

அதையும் உடனடியாக ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய பதிலை தருகிறோம் என்ற தகவலை தெரிவித்துள்ளார்கள். இந்த சந்திப்பானது மகிழ்ச்சியான சந்திப்பாக அமைந்தது” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

திமுக – காங்கிரஸ்… செல்போனில் பேச்சுவார்த்தை: செல்வப்பெருந்தகை புது விளக்கம்!

பாஜகவுடன் ஜி.கே.வாசன் பேச்சுவார்த்தை : அதிமுகவில் இணைந்த தமாகா நிர்வாகி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share