transfer of 13 ips officers
தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி ஐஜி தேன்மொழியும் மாற்றப்பட்டுள்ளார்.
சிபிசிஐடி ஐஜி தேன்மொழி தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
5 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அரக்கோணம் உதவிக் காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக், தெற்கு திருப்பூர் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகவும்
உத்தமபாளையம் உதவிக் காவல் கண்காணிப்பாளர் மது குமாரி மதுரை வடக்கு சட்டம் – ஒழுங்கு துணை ஆணையராகவும்,
காரைக்குடி உதவிக் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கோவை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகவும்,
திருவள்ளூர் உதவிக் காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா திருச்சி நகர துணை ஆணையராகவும்,
அருப்புக்கோட்டை உதவிக் காவல் கண்காணிப்பாளர் கரத் கருண் உத்தவ்ராவ் மதுரை தெற்கு சரக துணை ஆணையராகவும் பதவி உயர்வு வழங்கி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி நகர துணை ஆணையர் வி.அன்பு சென்னை ரயில்வே எஸ்பியாகவும்,
திருப்பூர் துணை ஆணையர் எஸ்.வனிதா காவல்துறை மாநில காவல் கட்டுப்பாட்டு அறை எஸ்பியாகவும்
காவல்துறை மாநில காவல் கட்டுப்பாட்டு அறை எஸ்பி ரமேஷ் பாபு சென்னைப் பெருநகர காவல்துறையின் நவீன கட்டுப்பாட்டு அறையின் துணை ஆணையராகவும்,
சென்னை காவல்துறையின் நவீன கட்டுப்பாட்டு அறையின் துணை ஆணையர் மகேஸ்வரன் சென்னை காவல்துறை பாதுகாப்பு துணை ஆணையராகவும், transfer of 13 ips officers
கோவை வடக்கு சட்டம் – ஒழுங்கு துணை ஆணையர் ரோஹித் நாதன் ராஜகோபால், கோவை போக்குவரத்து துணை ஆணையராகவும்,
மதுரை தெற்கு சரக துணை ஆணையர் பாலாஜி, காவல்துறை தலைமை அலுவலக உதவி ஐஜியாகவும்,
நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்பு படை எஸ்.பி அதிவீர பாண்டியன் சென்னை காவல் துறை நிர்வாகப் பணிகளுக்கான துணை ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா