“டோன்ட் கிவ் மி  தட்”… இளைஞரிடம் ஆவேசமடைந்த நிர்மலா சீதாராமன்

Published On:

| By Minnambalam Login1

sulur nirmala sitharaman

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில் உள்ள ஊஞ்சபாளையத்திற்கு, நேற்று (செப்டம்பர் 12) பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வுக்குச் சென்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை சூலூர் மாவட்டத்தில் உள்ள ஊஞ்சபாளையத்தில் நேற்று பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு  பகுதியாக, பாஜக கட்சியில் சேரவிருந்த நபர்களின் வீடுகளுக்கே நிர்மலா சீதாராமன் சென்று உறுப்பினர் அட்டையை வழங்கி வந்தார்.

அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த அருண் சந்திரன் என்கிற இளைஞர், ஏன் மொபைல் ஃபோன் போன்ற கருவிகளுக்குத் தேவையான குறைக்கடத்தி தகடுகளை (செமிகண்டக்டர் சிப்) வெளிநாடுகளிலிருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது? இந்திய அரசாங்கமே குறைக்கடத்தி தகடுகளைத் தயாரிக்கலாம் இல்லையா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு நிர்மலா சீதாராமன், இந்தியாவில் உள்ள தனியார் தொழிற்சாலைகளிலேயே இந்த தகடுகளை உற்பத்தி செய்வதற்கு மத்திய அரசு வழி வகுத்துள்ளது.  இது சம்பந்தமாக அரசு வெளியிட்டுள்ள குறிப்புகளைப் படித்துவிட்டு டெல்லிக்கு வாருங்கள், விவாதிப்போம். இது சம்பந்தமான உங்களுக்கு மேலும் எதாவது யோசனை இருந்தால் அரசுக்கு எழுதி அனுப்புங்கள்” என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமனிடம் அருண் சந்திரன் மேலும் சில கேள்விகளைக் கேட்க முனைந்த போது, நிர்மலா சீதாராமன் “டோண்ட் கிவ் மி  தட்(Don’t give me that) “என்று அருணிடம் கோபமாகச் சொல்லிவிட்டு, அங்கு இருந்து வேகமாகக் கிளம்பிச்சென்றார். மேலும் இதைப் படம் பிடிக்க வேண்டாம் என்று  நிர்மலா சீதாராமன் அங்கிருந்தவர்களைத் தடுத்தார்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

இந்திரா காந்தியை ராஜினாமா செய்ய வைத்தவர்: யார் இந்த காம்ரேட் சீதாராம் யெச்சூரி?

ஆத்தி… 100 கோடி… சோசியல் மீடியாவில் ரொனால்டோவை பின்தொடருபவர்கள்!

மதுபான வழக்கு… அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share