பெண்களை திரும்பி பார்த்தால்…: ஸ்டாலின் கொண்டு வந்த புதிய சட்டம் : தண்டனைகள் என்னென்ன?

Published On:

| By Kavi

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் சட்ட திருத்த மசோதா சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டது. 

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. 

அண்ணா பல்கலை மாணவி விவகாரம் சட்டப்பேரவை வரை சென்றுள்ளது. 

இந்த நிலையில் இன்று (ஜனவரி 10) சட்டப்பேரவையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் வகையிலான சட்ட மசோதாவை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். 

இதன் மீது பேசிய அவர், பிஎன்எஸ் சட்டத்தின் கீழும், மாநில அரசின் சட்டத்தின் கீழும் ஏற்கனவே இத்தகைய குற்றங்களுக்கு தண்டனை வரையறுக்கப்பட்டிருந்தாலும் இந்த தண்டனைகளை மேலும் கடுமையாக்க அவசியம் இருப்பதாக இந்த அரசு கருதுகிறது. 

இந்த அடிப்படையில் இத்தகைய குற்றங்களுக்கான தண்டனையை மேலும் கடுமையாக்குவதற்காக பிஎன்எஸ் மற்றும் பிஎன்எஸ்எஸ் சட்டங்களில் தமிழ்நாடு 1998 – பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்ட திருத்தத்திற்குமான சட்ட முன்வடிவை பேரவையின் ஒப்புதலுக்காக முன் வைத்தார். 

தொடர்ந்து அவர், 2025ஆம் ஆண்டு குற்றவியல் சட்டங்கள் தமிழ்நாடு திருத்த சட்டம் ஒன்றை அறிமுகம் செய்யவும் அனுமதி கோரினார்.

 இந்த தீர்மானம் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. 

தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு பெண்ணிற்கு துன்பம் விளைவித்தலை தடுக்க திருத்த சட்ட முன்வடிவை அறிமுகம் செய்தார் முதல்வர் ஸ்டாலின்.  இந்த தீர்மானமும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 

இந்த சட்டத்திருத்தங்களின் படி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். முன்னதாக 20 ஆண்டுகளுக்கு குறையாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆசிட் வீச்சு சம்பவம் ஏற்பட்டால், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும். பெண்களை பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை விதிக்கப்படும்.

மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானால், ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்க சட்ட திருத்தம் வகை செய்யப்படும். பிணையில் வெளியே வர முடியாது.

பெண்ணின் கண்ணியத்தை பாதிக்கும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்டால் 3 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை. பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளியிட்டால் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்படுபவர்களுக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

இந்த சட்டத்திருத்தம் மீது நாளை விவாதம் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

பாட பயந்து ஸ்டூடியோவில் இருந்து தப்பிய ஜெயச்சந்திரன்: பிடித்து வந்து பாட வைத்த தயாரிப்பாளர்!

’மின்னல் வேக அமைச்சர்’ : பாராட்டி தள்ளிய அதிமுக எம்.எல்.ஏ… வியந்த சட்டமன்றம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share