செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்றைய தினம் (நவம்பர் 20) கடைசி வழக்காக விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதனை எதிர்த்து செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் பேதா திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் காலை 11 மணிக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இரு தரப்பு வழக்கறிஞர்களும் நேரம் கோரியதால் இன்றைய தினம் கடைசி வழக்காக விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்தியா தோற்பதை பார்க்க முடியவில்லை: செல்வராகவன் உருக்கம்!