மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தனது சமத்துவ மக்கள் கட்சியை கலைத்து பாஜகவில் இணைத்துள்ளார் சரத்குமார். இதுதொடர்பாக நேற்று நள்ளிரவே, அண்ணாமலையை தொலைபேசி மூலம் எழுப்பி பேசியுள்ளார். Sarathkumar joined the BJP
நடிகர் சரத்குமார் தனது ஆரம்பகட்ட அரசியல் வாழ்க்கையில் திமுக, அதிமுக என இரு கட்சிகளிலுமே அங்கம் வகித்தார். 1998 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் வெற்றி பெறவில்லை.
2002ல் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். பின்னர் திமுகவில் இருந்து விலகிய அவர், அதிமுகவில் இணைந்து 2011 தேர்தலில் தென்காசி தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2016 தேர்தலிலும் அதிமுக சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் 2024 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட இருப்பதாக கூறினார்.
ஆனால் 2007ல் தொடங்கப்பட்ட தனது கட்சியையே கலைத்து, பாஜகவில் சேர்த்துள்ளார் சரத்குமார்.
”இது மக்களின் சேவைக்கான பயணம்” என்று தெரிவித்துள்ள அவர், பிரதமர் மோடி காமராஜரைப் போல ஆட்சி நடத்துவதாக புகழாரம் சூட்டினார்.
பாஜகவுடன் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்தது பற்றி விசாரித்தபோது,
“பாஜகவுடன் கட்சியை இணைப்பது பற்றி சரத்குமார், மாநில தலைவர் அண்ணாமலைக்கு நள்ளிரவு 2 மணிக்கு போன் செய்து சொல்லியிருக்கிறார்.
அப்போதே கட்சியை இணைப்பது பற்றி இருவரும் பேசியிருக்கிறார்கள். அதன்படி, சென்னையில் சமக அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது கட்சியை இணைத்தார் சரத்குமார்.
இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் 4 மாநிலங்களுக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காக சரத்குமார் அனுப்பப்படவுள்ளார். அவரது மனைவியும் நடிகையுமான ராதிகா விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்புள்ளது” என்கிறார்கள் சரத்குமாருக்கு நெருக்கமான வட்டாரத்தில்.
“நேற்று நள்ளிரவு 2 மணியளவில் தொலைபேசியில் என்னை அழைத்த சரத்குமார், நான் முழுவதுமாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை மோடியுடைய பாஜகவில் இணைத்து, 2024 தேர்தலுக்காகப் பாடுபடப்போகிறோம் என்றார். சரத்குமார் தேசியத்துக்கு தேவைப்படுகிறார். அவரை சிறிய வட்டத்துக்குள் அடைத்துவைக்கக் கூடாது” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
இந்நிலையில், தனது எக்ஸ் பக்கத்தின் பெயரில், மோடியின் குடும்பம் என இணைத்துள்ளார் சரத்குமார். இது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு!
Heatwave இந்த மாவட்டத்துல ‘வெயில்’ கொளுத்துதாம்!
Sarathkumar joined the BJP
Comments are closed.