’ED முன்பு 12ஆம் தேதிக்கு பிறகு ஆஜராக தயார்.. ஆனால்’ : கெஜ்ரிவால்

Published On:

| By christopher

Ready to appear ED Kejriwal

அமலாக்கத்துறையின் 8வது சம்மனுக்கு இன்று (மார்ச் 4) ஆஜராகாத டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ’வரும் மார்ச் 12 ஆம் தேதிக்கு பிறகு வீடியோ காணொளி மூலம் தான் ஆஜராக தயார்’ என்று தெரிவித்துள்ளார். Ready to appear ED Kejriwal

டெல்லியில் புதிய மதுபான கொள்கையில் ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், சட்டவிரோதப் பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் ஏற்கெனவே டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் எம்.பி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

அந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் அமலாக்கத்துறை ஏற்கனவே 7 முறை சம்மன் அனுப்பிய நிலையில் அவர் ஆஜராகவில்லை.

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அமலாக்கத்துறை மூலம் தன்னை கைது செய்து பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்க பாஜக முயல்வதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

அதேவேளையில், சம்மனுக்கு ஆஜராக மறுப்பதாக கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. அதில், அவர் வரும் 16 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜராகும்படி அமலாக்கத்துறை 8-வது முறையாக சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.

மாறாக, வரும் மார்ச் 12 ஆம் தேதிக்கு பிறகு வீடியோ காணொளி மூலம் ஆஜராக தயார் என அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறைக்கு பதிலளித்துள்ளார். Ready to appear ED Kejriwal

அவர், ”அமலாக்கத்துறையின் சம்மனுக்கு இன்று ஆஜராக போவது இல்லை. ஆனால் மார்ச் 12 ஆம் தேதிக்குப் பிறகு காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராக தயார்” என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

பரிகார பூஜை கட்டண அறிவிப்பு வாபஸ்!

எலெக்சன் ஃப்ளாஷ்: பாஜக எவ்ளோ ட்ரை பண்ணாலும் வாய்ப்பில்ல..கதவு, ஜன்னலை மூடிய எடப்பாடி

IPL 2024: ஹைதராபாத் அணியின் ‘புதிய’ கேப்டன் இவர்தான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel