ஆளுநர் மாளிகை செலவினங்கள்: கட்டுப்பாடுகளை கொண்டு வரும் பிடிஆர்

Published On:

| By Kavi

தமிழக சட்டமன்றத்தில் இன்று (ஏப்ரல் 10) ஆளுநருக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானத்தின் மீது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில்,

“ஆளுநருக்கு மூன்று தலைப்புகளில் அரசாங்கம் நிதி ஒதுக்குகிறது. செயலகம், வீட்டு செலவு ,விருப்ப நிதி உட்பட 3 தலைப்புகளில் நிதி ஒதுக்கப்படுகிறது.

இதில் ஆட்சிக்கு முன்பு ஆளுநர் செயலகத்துக்கு 2.41 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீட்டை கடந்த ஆண்டு 2.86 கோடியாக கொடுத்தோம்.

இந்த ஆண்டு 3 கோடியே 63 லட்சமாக ரூ.75 லட்சம் அதிகரித்திருக்கிறோம்.

அதுபோன்று வீட்டு செலவு என்பது ஆட்சிக்கு வரும்போது ரூ.11 கோடி 60 லட்சம் இருந்ததை, கடந்த ஆண்டு ரூ.15 கோடி 93 லட்சமாகவும், இந்த ஆண்டு 16 கோடி 69 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மூன்றாவது Discretionary grant (விருப்ப நிதி). இந்த நிதி 2018-19-ல் ரூ.1.57 லட்சமாக இருந்தது. இந்த தொகையை 50 லட்சமாகவும், அடுத்தது 5 கோடியாகவும் உயர்த்தியுள்ளார்கள்.

அதாவது ஏழை, எளிய மக்களின் மருத்துவ சேவை, திருமண உதவி, வாழ்வாதாரம், தகுதி வாய்ந்த தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ஆளுநர் தனது விருப்ப நிதியில் இருந்து நிதி ஒதுக்கலாம்.

இது விதிமுறை. இந்த தொகையானது ஒரு லட்சம், 5 லட்சம், 8 லட்சம் வரை இருக்கும் போது பிரச்சினை இல்லை. ஆனால் 5 கோடியாக உயரும் போது அங்கு வீதிமீறல் நடந்துள்ளது.

முன்னதாக அட்சய பாத்திர திட்டத்துக்கு இரண்டு முறை, ரூ.2 கோடி விருப்ப நிதி வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தேன்.

ஆனால் அட்சய பாத்திரம் என்ற பெயரில் ஆளுநரின் ஹவுஸ் ஹோல்டு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. அட்சய பாத்திர திட்டத்துக்கு நிதி போகவில்லை.

இதுவரை ஒதுக்கப்பட்ட ரூ.18 கோடியில் 11.32 கோடி ரூபாய் ஆளுநர் மாளிகை கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை செலவு செய்த இந்த ரூ.11.32 கோடி ரூபாய்க்கு தமிழக அரசுக்கு கணக்கு தெரிவிக்கப்படவில்லை.

யுபிஎஸ்சி மாணவர்கள் கூட்டத்திற்கு 5 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. தேனீர் விருந்து 30 லட்சம் ரூபாய். ஊட்டி ராஜ்பவனில் நடந்த கலாசார நிகழ்வுக்கு 3 லட்ச ரூபாய் விருப்ப நிதியில் இருந்து செலவிடப்பட்டுள்ளது.

இதுபோன்று ஆளுநர் மாளிகை செலவினங்களில் விதிமீறல்கள் நடந்துள்ளன. ஒரே நபருக்கு மீண்டும் மீண்டும் நிதி கொடுக்கக்கூடாது என்று நிதித்துறையில் விதி இருக்கிறது.

இந்த விதிமுறை மீறல்கள் தடுக்கப்படும். விதிமுறைகளின் படிதான் இனி செலவு செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடுகளை முதலமைச்சர் அறிவுறுத்தலின் பெயரில் கொண்டுவருவேன் என்று உறுதியுடன் கூறுகிறேன்” என்றார்.

பிரியா

கொரோனா – தயார் நிலையில் தமிழகம்: மா.சுப்பிரமணியன்

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

raj bhavan expenditure
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share