சென்னையில் செட்டிநாடு குழுமத்துக்குத் தொடர்புடைய 6 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட செட்டிநாடு நிறுவனம் சிமெண்ட், கட்டுமானம், லாஜிஸ்டிக்ஸ் என இந்தியா முழுவதும் பல்வேறு கிளைகளைக் கொண்டு இயங்கி வருகிறது.
செட்டிநாடு நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு இந்நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. இதில் 700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 24) செட்டிநாடு குழுமத்துக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது.
வருமான வரித்துறை அளித்த ஆவணங்களின் அடிப்படையில், சென்னையில் 6 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தனிச்சட்டத்தின் கீழ் செட்டிநாடு குழுமத்தின் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
தமிழகத்தில் ஒரு பக்கம் ஜி ஸ்கொயர் நிறுவனங்களுக்குத் தொடர்புடைய இடங்களில் ஐடி சோதனை நடந்துவரும் நிலையில் மறுபக்கம் செட்டிநாடு குழுமத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரியா