தேர்தல் முடிவுகள்: ராகுல் ரியாக்‌ஷன்!

Published On:

| By Selvam

தெலங்கானா மக்களுக்கு காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (டிசம்பர் 3) தெரிவித்துள்ளார்.

தெலங்கானா, சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இதில் இரவு 7 மணி நிலவரப்படி சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜகவும், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை வகிக்கின்றன.

காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் ஆட்சியை இழந்துள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியமைக்க உள்ளது.

தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்கள் மக்களின் ஆணையை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம்.

சித்தாந்த போர் தொடரும். தெலங்கானா மக்களுக்கு நன்றி. காங்கிரஸ் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளும் தெலங்கானாவில் நிறைவேற்றப்படும். வெற்றிக்காக பாடுபட்ட அனைத்து தொண்டர்களுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

புயல் முன்னெச்சரிக்கை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

லஞ்ச ஒழிப்புத்துறை மீது நடவடிக்கை: டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share