ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டி… பிரியங்கா காந்திக்கு நோ சீட்!

Published On:

| By christopher

உத்தரபிரதேசம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (மே 3) வெளியாகியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் காங்கிரஸ் வேட்பாளர்களாக யார் போட்டியிடுவார்கள் என்ற கேள்வி பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தியும், அமேதி தொகுதியில் கிஷோரி லால் சர்மாவும் போட்டியிடுவார்கள் என காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது.

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2004 முதல் தொடர்ந்து மூன்று முறை அமேதி தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2019 ம் ஆண்டு அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியுற்றார்.

இந்த நிலையில், தனது சொந்த தொகுதியான அமேதி தொகுதியை விட்டுவிட்டு தனது தாயின் தொகுதியான ரேபரேலி தொகுதியில் இந்த முறை களம் கண்டுள்ளார் ராகுல் காந்தி.

முன்னதாக அமேதியில் பாஜகவின் ஸ்மிருதி இரானியை எதிர்த்து பிரியங்கா காந்திக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிஷோரி லால் ஷர்மா தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி, கிஷோரி லால் சர்மா இருவரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்கள்.

குறிப்பாக ரேபரேலியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில்,காங்கிரஸ் தலைவர் கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

முரண்டு பிடிக்கும் இயக்குநர்… கைவிட்ட அமேசான் பிரைம் : நெருக்கடியில் சௌந்தர்யா ரஜினிகாந்த்

கருத்தடை செய்த 82 பேரில் 81 பேர் மீண்டும் கர்ப்பம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel