விக்கிரவாண்டியில் பாமக போட்டி : அண்ணாமலை அறிவிப்பு!

Published On:

| By Kavi

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் பாமக போட்டியிடுகிறது.

விக்கிரவாண்டியில் வரும் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த  தொகுதியில் என்.டி.ஏ கூட்டணி சார்பில் யார் போட்டியிடுவது… பாஜகவா, பாமகவா என இரு கட்சியினரும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

‘விக்கிரவாண்டியில் பாமக போட்டியிட்டால் சரியாக இருக்கும். பாமக போட்டியிட்டால் திமுகவுக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குமான போட்டியாக மாற்றி அதிமுகவை மூன்றாம் இடத்துக்கு தள்ளுவோம்.அதனால் எந்த கவலையும் இல்லாமல் பாமக போட்டியிடட்டும், பாஜக அனைத்து ஆதரவையும் வழங்கும்’ என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிடம் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து மின்னம்பலத்தில், விக்கிரவாண்டி இடைத் தேர்தல்! முந்தும் திமுக… அன்புமணிக்கு அண்ணாமலையின் மெசேஜ்! என்ற தலைப்பில் வெளியான டிஜிட்டல் திண்ணையில் குறிப்பிட்டிருந்தோம்.

Image

இந்தநிலையில் விக்கிரவாண்டியில் பாமக போட்டியிடும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.

“என்.டி.ஏ கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் ஒருமனதாக எடுத்த முடிவின்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியானது விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிக்கப்படுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெற அனைவரும் இணைந்து பாடுபடுவோம்” என்று அறிவித்துள்ளார் அண்ணாமலை.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மூடப்படும் திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டல்… போலீஸ் பாதுகாப்புடன் சுற்றுலாத் துறை நடவடிக்கை!

விக்கிரவாண்டி: பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியா?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel