திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பிரதமர் மோடி, இசைஞானி இளையராஜா மற்றும் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கினார் பின்னர், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய அவர்,
”காந்திகிராம பல்கலைக் கழகத்தை மகாத்மா காந்தி திறந்து வைத்தார். கிராமப்புற மேம்பாடு குறித்த அவரது எண்ணங்களின் உணர்வை இங்கு காணலாம்.
கிராமத்தின் ஆன்மா நகரத்தின் வசதி என்பதே எங்கள் கொள்கை. காந்தியின் கொள்கையே தற்போதைய தற்சார்பு திட்டம். தற்போதைய வளர்ச்சி கிராமத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. கிராமங்கள் சுயமாகச் செயல்பட்டால் நாடும் சுயமாகச் செயல்படமுடியும்.
கிராமங்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் பிரச்சனைகளை ஒன்றாக எதிர்கொள்ளலாம். கிராமங்களில் இணையம் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2 லட்சம் கிராமங்களில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. காதிப் பொருட்கள் உலக அளவில் கவனம் பெற்று வருகிறது, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இயற்கை உரங்களை இடுவது நிலத்துக்கும், உடலுக்கும் நன்மை பயக்கும். வடகிழக்கு மாநிலங்களில் ரசாயனம் இல்லாத விவசாயம் பெரும் வெற்றி பெற்றுள்ளது.
தமிழ்நாடு எப்போதும் தேசிய உணர்வுமிக்கதாக இருந்து வருகிறது. காசி தமிழ் சங்கமம் விரைவில் காசியில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழகத்தின் மொழி, கலாச்சாரம் கொண்டாடப்படும். பெண் சக்தியில் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது.
அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாவை வழிநடத்தும் பொறுப்பு இளைஞர்களுக்கே உள்ளது” என்று கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
6 பேர் விடுதலை : சட்ட போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி – முதல்வர்