மக்களவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறிவரும் நிலையில், மறுபுறம் தனது ஆதரவாளர்களுடன் தங்களுக்கு ஏற்ற சுயேட்சை சின்னம் எது என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.
அதன்படி இரட்டை இலையை நினைவூட்டும் வகையில் இரட்டை காதணி , இரட்டை மின்விளக்கு என்று ‘இரட்டை ..’ அடையாளம் கொண்ட சின்னங்களில் இருந்து சுயேட்சை சின்னத்தைக் கேட்டுப்பெற ஓ.பன்னீர்செல்வம் அணியினர் திட்டமிட்டுள்ளனர்.
2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை மின்விளக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது. அப்போது ஒரு விளக்கு எம்.ஜி.ஆர் என்றும் மறு விளக்கு ஜெயலலிதா என்றும் விளக்கம் கொடுத்திருந்தார் பன்னீர்செல்வம்.
எனவே தற்போதும் அதே பாணியில் இரட்டை மின்விளக்கு சின்னத்தைக் கேட்டுப் பெற பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார்.
ஒருவேளை அதிமுகவினர் தங்கள் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்களை வைத்து இரட்டை மின்விளக்கு சின்னத்தைக் கவர்ந்து விட்டால், இரட்டை அணிகலனை பெற முயற்சிக்க உள்ளனர் ஓ.பி.எஸ் தரப்பினர்.
– வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நவாஸ் கனிக்கு சொந்தமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை!
மோடிக்கு கொலை மிரட்டல் : தா.மோ. அன்பரசன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!