திண்டுக்கல்லில் தமிழக மக்கள் அளித்த உற்சாக வரவேற்பால் தாம் அக மகிழ்ந்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் இன்று (நவம்பர் 11) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார். இவ்விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், திமுக மற்றும் பாஜக கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக இவ்விழாவில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையத்திலிருந்து திண்டுக்கல் அம்பாத்துரைக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

முக்கியமாக, திண்டுக்கல் வந்த பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வரவேற்றதுடன், ’பொன்னியின் செல்வன்’ தமிழ் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு பதிப்பினையும் வழங்கி மகிழ்வித்தார்.
பட்டமளிப்பு நிகழ்வுக்குப் பிறகு ஹெலிகாப்டரில் மதுரை செல்வதாக இருந்த மோடி, மோசமான வானிலை காரணமாக காரில் சென்றார். மதுரையில் இருந்து விமானப்படை விமானம் மூலம் விசாகப்பட்டினத்துக்கு சென்றார்.
இந்த நிலையில், திண்டுக்கலில் தமிழக மக்கள் அளித்த வரவேற்பால், தாம் அகமகிழ்ந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், இன்று (நவம்பர் 11) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”வணக்கம் தமிழ்நாடு! திண்டுக்கல்லில் அளிக்கப்பட்ட மிகச்சிறப்பான வரவேற்பால் அகமகிழ்ந்தேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
ஜெ.பிரகாஷ்
மோடிக்கு பொன்னியின் செல்வன் நாவலைப் பரிசளித்த ஸ்டாலின்!
ஆளுநர் மாளிகை, கலைவாணர் அரங்கம், கமலாலயம்: சென்னையில் அமித்ஷா ஷெட்யூல்!