உலகக்கோப்பை இறுதிப்போட்டி: வீட்டில் குடும்பத்துடன் காணும் முதல்வர்!

Published On:

| By christopher

அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான உலகக்கோப்பை இறுதிப்போட்டி  இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கியுள்ளது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், இந்தியா பேட்டிங்கில் களமிறங்கியது.

ஒரு லட்சத்திற்கும் அதிகமாக ரசிகர்களுடன் ஹவுஸ்ஃபுல்லாக காட்சியளிக்கும் மைதானத்தில் பிரதமர் மோடி, ஆஸ்திரேலியா துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ், உள்துறை அமைச்சர் அமித் ஷா, விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், அசாம், குஜராத், மேகாலயா உள்ளிட்ட 8 மாநில முதலமைச்சர்கள் போட்டியை காண நேரில் வருகை தந்துள்ளனர்.

அதே போல் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இறுதிப்போட்டியை நேரில் காண அகமதாபாத் சென்றுள்ளார்.

அதே நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், நேற்று நடந்த சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் கூட சோர்வுடன் காணப்பட்டார். இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டியை தனது வீட்டிலேயே குடும்பத்துடன் தொலைக்காட்சியில் பார்க்க உள்ளதாக நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “கம் ஆன் இந்தியா… கோப்பையை மூன்றாக்குங்கள்” என்று குறிப்பிட்டு இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர்  ஜெமா

WorldcupFinal2023: டாஸ் வென்றது ஆஸ்திரேலியா… இந்தியா பேட்டிங்!

ஆளுநர் டெல்லி பயணம்: காரணம் இதுதான்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel