வாய்க்கொழுப்பு… எதற்கு நிதியமைச்சர் பதவி?: நிர்மலா சீதாராமனை விளாசிய ஸ்டாலின்

Published On:

| By Kavi

நிர்மலா சீதாராமனுக்கு வாய்கொழுப்பு இருப்பதாக திருச்சி பிரச்சார கூட்டத்தில் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் விமர்சித்தார்.

சமீபத்தில் சென்னையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “எப்போதும் இன்னொருவர் போட்ட பிச்சையில் நாம் வாழத் தேவையில்லை. வெள்ளமா இந்தா 1000  ரூபாய் எடுத்துக்கோ.. வீடு இடிஞ்சி விழுந்துபோச்சா இந்தா 500 ரூபாய் எடுத்துக்கோ.. என்று சில கட்சிகள் மக்களை டீல் செய்கின்றன” என வெள்ள நிவாரணத்தை குறிப்பிட்டு பேசியிருந்தார்.

இதற்கு இன்று (மார்ச் 22) திருச்சி பிரச்சாரக் கூட்டத்தில் கண்டனம் தெரிவித்து பேசிய ஸ்டாலின் “நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களுக்கு நிவாரணம் வழங்குவது பிச்சை என்று எவ்வளவு ஆணவமாக சொல்லியிருக்கிறார். எவ்வளவு வாய்க்கொழுப்பு.

உங்கள் அரசியலுக்காக தமிழ்நாட்டு மக்களை கொச்சைப்படுத்துவீர்களா.  பாதிக்கப்பட்ட மக்களவை அவமானப்படுத்துவீர்களா.   மக்களுக்கு கொடுப்பது பிச்சை அல்ல அவர்களது உரிமை.

மக்கள் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு உதவி செய்வது கடமை. அதைதான் திமுக செய்கிறது. கார்பரேட் கம்பெனிகளுக்கு பல்லாயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்கிறீர்களே தொழிலதிபர்கள் கூட்டத்தில் போய் இப்படி பேசுவீர்களா?.

மக்களுக்கு உதவ முடியவில்லை என்றால் எதற்கு நிதியமைச்சர் பதவி?” என கேள்வி எழுப்பினார்.

“பெங்களூருவில் வெடித்த குண்டு, தமிழர்கள் வைத்த குண்டு என்று ஒன்றிய அமைச்சர் ஒருவர் சொல்கிறார். தமிழர்கள் என்ன வன்முறையாளர்களா? தமிழக மக்களை ஏன் கொச்சைப்படுத்தி பேசுகிறீர்கள்?” எனவும் கேள்வி எழுப்பினார் ஸ்டாலின்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை அமலாக்கத்துறை கஸ்டடி!

ராஜ்பவனில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறேன்: ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel